தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும்: காங்கிரஸ்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும்: காங்கிரஸ்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும்: காங்கிரஸ்
Published on

தமிழக மக்களுக்கு ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி விரைவில் வரும் என காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவருமான கே.ஆர்.இராமசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை, டெங்கு காய்ச்சல் இல்லை என மூடி மறைக்கிறது என்றும், ஆனால், தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மைனாரிட்டி பலத்தை கொண்டு ஆட்சி செய்யும் தமிழக அரசினால், முழுமையாக செயல்பட முடியவில்லை என்ற அவர், ஜி.எஸ்.டி வரியால் தமிழகம் முழுவதும் அரசின் நலத்திட்ட பணிகள் முடங்கி போயுள்ளது என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு சில உயர் அதிகாரிகள் துணை போவதாகவும், அரசின் தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com