பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு

பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு
பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு
Published on

2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 15 நாளில் நடத்த வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்புதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலும் என்றும் 2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com