\
கமிஷன் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கமிஷன் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கமிஷன் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசு கமிஷன் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் என்ற மதிப்பு மிக்க நாணயம், அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியின்றி தத்தளிப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்ற தவறிய அதிமுக அரசு தற்போது 2ஆவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது.

2016ல் அகில இந்திய அளவில் 2 புள்ளி 9 சதவிகித அன்னிய முதலீடு மட்டுமே பெற்று தமிழகம் பின் தங்கியுள்ளது. தமிழகத்தில் 1 புள்ளி 65 சதவிகித உற்பத்தி வளர்ச்சி மட்டுமே இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கும் நிலையில், தொழில் அமைப்புகள் தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சியடைந்து வருவதை கண்கலங்க பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலேயோ, உற்பத்தியை பெருக்குவதிலேயோ தமிழக அரசு கவனம் செலுத்தாமல், கமிஷன் கலாச்சாரத்திலேயே மூழ்கி இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com