தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ் பயில தொடங்கியுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக அக்டோபர் 6-ம் தேதி பன்சாரிலால் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா தொகுதியைச் சேர்ந்த இவர் ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
இந்த நிலையில், ஆளுநர் பன்சாரிலால் தனது சொந்த விரும்பத்தின் பெயரில் தமிழ் மொழியை கற்க தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் மொழியை ஆளுநர் கற்க தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், செம்மொழியான தமிழை கற்பதன் மூலம் தமிழக மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு எளிதாக இருக்கும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.