’பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்’ - தமிழக அரசு எச்சரிக்கை

’பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்’ - தமிழக அரசு எச்சரிக்கை
’பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்’ - தமிழக அரசு எச்சரிக்கை

பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

துறை ரீதியிலான அதிகாரிகளுடன் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய தலைமைச்செயலாளர் “பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டு போல் காண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com