மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: முதலமைச்சர்

மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: முதலமைச்சர்

மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: முதலமைச்சர்
Published on

அனைத்து அரசு பணியிடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு பணியிடங்களிலும் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. இதை 4 சதவீதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவிகித இடஒதுக்கீடும், செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவிகித இடஒதுக்கீடும், அறிவுசார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவிகித ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றில் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தியது. இந்நிலையில் தமிழக அரசும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com