நிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? - ஓபிஎஸ் கேள்வி

நிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? - ஓபிஎஸ் கேள்வி
நிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? - ஓபிஎஸ் கேள்வி

அழைப்பிதழில் பெயர் முறையாக இடம்பெற்றும் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். 

விழாவில் பேசிய ஓபிஎஸ், “அதிமுகதான் எப்போதும் ஆளும், அதுவே வரலாறாக இருக்கும். தமிழர்கள் நலன் காக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே; அதுதான் உண்மை. எம்ஜிஆரின் புகழும், சக்தியும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மறையாது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 10 லட்சம் பேர் பங்கேற்றதால் சென்னையே இன்று குலுங்கியது. எம்ஜிஆர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வரலாறு. மக்களை காக்கவே அதிமுகவை உருவாக்கினார் எம்ஜிஆர். 

கருணாநிதியை விமர்சித்து பேசுவதாக கூறி மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்கவில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது பற்றி ஏதேதோ காரணம் கூறி அறிக்கை விட்டுள்ளார் ஸ்டாலின். அழைப்பிதழில் ஸ்டாலின் பெயர் முறையாக இடம்பெற்றும் அவர் பங்கேற்கவில்லை. 

திமுக ஆட்சியில் தமிழக ஜீவாதாரங்களை காக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள். தமிழக ஜீவாரதார பிரச்னைகளுக்கு குரல்கொடுக்காமல் இருந்தவர்களை சுட்டிக்காட்டாமல் எப்படி இருக்க முடியும்.

இலங்கையில் தமிழின மக்கள் மீது ராஜபக்சே போர் தொடுக்க இருந்தது, காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு தெரியும். ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்ற வைகோவுக்கு இனி தூக்கமே வராது. குண்டூசியை வைத்துக் கொண்டு குன்றத்தூர் மலையை ஓட்டை போடுவேன் என டிடிவி துடிக்கிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com