\
ஜெயலலிதா படம் பேரவையில் திறப்பு: காங்கிரஸ் புறக்கணிப்பு!

ஜெயலலிதா படம் பேரவையில் திறப்பு: காங்கிரஸ் புறக்கணிப்பு!

ஜெயலலிதா படம் பேரவையில் திறப்பு: காங்கிரஸ் புறக்கணிப்பு!
Published on: 

சட்டப்பேரவையில் நாளை ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை பேரவையில் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் நாளை நடைபெறும் ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com