முகநூலில் வைரலான தபால் வாக்கு சீட்டு - தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை உள்ளிட்ட மூவர் கைது

முகநூலில் வைரலான தபால் வாக்கு சீட்டு - தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை உள்ளிட்ட மூவர் கைது
முகநூலில் வைரலான தபால் வாக்கு சீட்டு - தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை உள்ளிட்ட மூவர் கைது

தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்கு பதிவிட்டதை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தொடர்பாக ஆசிரியை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள வெள்ளக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை கிருஷ்ணவேணி, தபால் வாக்கு செலுத்தியுள்ளார். இவரது கணவர் கணேச பாண்டியன், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறார்.

மனைவி தமது கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டாரா என்பதை உறுதி செய்ய கிருஷ்ணவேனியின் தபால் வாக்கை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லியுள்ளார். அதன்படி கிருஷ்ணவேணி , புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதனை கணவர் கணேச மூர்த்தி, தனது நண்பர் செந்தில்குமாருக்கு பகிர்ந்துள்ளார். ஆசிரியையின் தபால் வாக்கினை, செந்தில்குமார் , பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இதனிடையே, முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் வலம் வந்த தபால் வாக்கு சீட்டு வீடியோ தொடர்புடைய மற்றொரு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை தவறான முறையில் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com