விஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன்

விஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன்

விஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன்
Published on

நடிகர் விஜய் முதலில் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை பேசியது " பல பேர் முதலமைச்சர் கனவுகளோடு திரையில் நடிக்கிறார்கள். அவர்கள் திரையில்தான்  ஆட்சி செய்ய முடியும். கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஒட்டு பற்றி படம் எடுக்கிறார்கள். முதலில் நடிகர் விஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும்" என்று சர்கார் கதை திருட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். 

மேலும் தொடர்ந்த அவர் " ராகுல் காந்தியின் பேச்சை எதிர் கட்சிகள் தான் விமர்சனம் செய்தார்கள். அதனால் இப்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனம் செய்கிறார்கள். ராகுல் பிரதமர் என்று அறிவித்தால் இப்பொது இருக்கும் 40 சீட்டு கூட அக்கட்சி பெறாது. தமிழகத்தின் உள்ள தமிழர்கள், இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பது மோடி ஆட்சியில் தான். உண்மையாக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஆட்சி பாஜகவின் ஆட்சிதான்." என கூறினார்.

மதச்சார்பற்ற கூட்டணி குறித்து பேசிய தமிழிசை " எத்தனை ஸ்டாலின், எத்தனை லாலு பிரசாத், யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது. மதசார்பற்ற கூட்டணி யார் வைக்க வேண்டும் என்று கூறினாலும் அவர்கள் எங்களுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். நாங்கள் தான் மதசார்பற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம். சிறுபான்மை மக்கள் பாஜகவுடன் தான் இருக்கிறார்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" என தெரிவித்தார். 

இது குறித்து மேலும் பேசிய அவர் "பாரதிய ஜனதா கட்சியின் நிதிக்காக வெளிப்படையான நிதி பங்களிப்பு நமோ ஆப் மூலம் செலுத்தி வருகிறார்கள். சாமானியார்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. இது கார்பரேட்க்கான ஆட்சியில் இல்லை காமன் மேன்க்கான ஆட்சி.
பட்டாசு தீர்ப்பில் மிக அதிமான கட்டுபாடு இருக்கிறது, இது ஏற்புடையது அல்ல. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், குழந்தை கைது செய்தது தவறு. பட்டாசு தீர்ப்பு குறித்து பாஜக சட்ட ரீதியாக அணுகும்" என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com