டிரெண்டிங்
"தேர்தல் போலவே பாஜக வெற்றியும் நெருங்கி விட்டது" : தமிழிசை
"தேர்தல் போலவே பாஜக வெற்றியும் நெருங்கி விட்டது" : தமிழிசை
தேர்தல் நெருங்கி விட்டது போல, பாஜகவின் வெற்றியும் நெருங்கி விட்டதாக தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி புல்லாவழி கிராமத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உப்பளத் தொழிலாளர்களின், குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்த தமிழிசை, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். மீன் பிடித்தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போல உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம், தினக்கூலி உயர்வு போன்றவை வழங்க வழிவகைச் செய்யப்படும் எனத் தெரிவித்தார். உப்பளத் தொழிலாளர்களுடன் பரப்புரையில் ஈடுபட்ட தமிழிசைக்கு, தொழிலாளர்கள் உப்பு பாக்கெட்டுகளை பரிசாக வழங்கினர்.