\
அஸ்வினியின் மரணம் என்னை நிலைகுலையச் செய்கிறது: தமிழிசை

அஸ்வினியின் மரணம் என்னை நிலைகுலையச் செய்கிறது: தமிழிசை

அஸ்வினியின் மரணம் என்னை நிலைகுலையச் செய்கிறது: தமிழிசை
Published on

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெண்கள் மீதான வன்முறை குறித்து ட்விட்டரில் தனது வேதனையை பதிவு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்தினால் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷாவின் வேதனையில் இருந்து தமிழகம் இன்னும் முழுவதுமாக மீளவில்லை. அதற்குள் சென்னையில் அஸ்வினி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து  தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் “மாணவி அஸ்வினியின் மரணம் என்னை நிலைகுலையச் செய்கிறது. அவளை பாதுகாத்திருக்க வேண்டும். காலையில் உஷாவிற்கு அஞ்சலி.. மாலையில் தாக்கப்பட்ட வெள்ளையம்மாள் சந்திப்பு. நேற்று வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த ஜீவிதாவிற்கு அஞ்சலி..பெண்ணினமே எவ்வளவு கொடுமைகளைத் தாங்கப்போகிறாய்? பெண்கள் தினக்கொ(தி)ண்டாட்டம்?” என பொங்கு எழுந்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com