ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியானது : தமிழிசை விமர்சனம்
இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியானது என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏதேனும் இன்று நடைபெற்றது அதற்கு முன்பதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாக தெரிவித்தார்.
கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்த பொழுது கோ பேக் மோடி என்ற hastag ட்ரெண்டிங் ஆனது. ஆனால் வரும் நாட்களில் பிரதமர் தமிழகத்துக்கு வரும் பொழுது தமிழக மக்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்றும் தமிழக நலனுக்காகவும், பல திட்டங்களை நிச்சயம் மோடி செய்வார், ஆகையால் இந்த முறை மக்களிடமே நான் ஒரு கேள்வியை கேட்கிறேன் தமிழகத்திற்கு நல்லது செய்ய வரக்கூடிய மோடிக்கு கருப்புக்கொடி அல்லது கருப்புக்கொடி காட்டுபவர்களுக்கு வரவேற்பா? இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர் நடத்தும் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி இறுதி செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.மேலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி ஒரு நல்ல கூட்டணியாக இருக்கும் என்று தமிழிசை தெரிவித்தார்.
12ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தனார் அங்கு வர அனுமதி கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல. நிச்சயம் யோகி ஆதித்தனார் தூத்துக்குடி வருவார் கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் அதனால் முடிந்ததை செய்து கொள்ளட்டும் என்று தமிழிசை சவால் விடுத்தார்.

