\
உளறல் நாயகன் ஆகிவிட்டார்: கமல் மீது தமிழிசை தாக்கு!

உளறல் நாயகன் ஆகிவிட்டார்: கமல் மீது தமிழிசை தாக்கு!

உளறல் நாயகன் ஆகிவிட்டார்: கமல் மீது தமிழிசை தாக்கு!
Published on

கமல்ஹாசன் புதிதாக வெளியாக உள்ள தனது படத்தை ஓட வைப்பதற்காகவே இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுகிறார் என பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமரிசித்துள்ளார். 
இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வி்ஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை ஓட வைக்க கமல்ஹாசன் எடுத்துள்ள பொய் விஸ்வரூபமே இந்து தீவிரவாதம் என கொளுத்திப்போட்டதன் பின்னணி என தமிழிசை கூறியுள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தவறான கருத்துகளைக் கூறுவது மூலம் உளறல் நாயகன் ஆகி வருவதாகவும் அரசியலில் வளரும் நாயகன் ஆக ஆசைப்பட்டு மிரளும் நாயகனாகவே ஆகப் போகிறார் என்றும் தமிழிசை கூறியுள்ளார். மேலும் 2015ல் ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள நிவாரணப் பொருட்கள் மீது அவரது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை கமல்ஹாசன் ஏன் எதிர்க்கவில்லை என்றும் அம்மா இறந்துவிட்டார் என்பதால் தற்போது துணிச்சல் வந்துவிட்டதா? என்றும் தமிழசை கேட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com