ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு.. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகை

ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு.. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகை
ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு.. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகை

ரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கேட்டு, வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம்.

பொன்மலை ஆர்மரி கேட், மேற்கு நுழைவாயில் மற்றும் ஊ.கு நுழைவாயில்களிலும் முற்றுகை. கடந்த 2017 ஆம் ஆண்டு இரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில், தொழில்நுட்ப பணியாளர்களாக 581 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் கடந்த 3ம் தேதி முதல், தினமும் 50 பேர் என்ற அடிப்படையில் வரவழைக்கப்பட்டு, அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, பணி நியமன ஆணையை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது.

இதில் நிரப்பப்படக் கூடிய 581 பணி இடங்களில் 12 இடங்கள் மட்டுமே தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 569 இடங்களில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 163 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 115 பேருக்கும், உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 36 பேருக்கும், மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 87 பேருக்கும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 49 பேருக்கும், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 16 பேருக்கும், மற்றும் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த தலா 12 பேருக்கும் வேலை வழங்கப்படுகிறது.

இதில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் வேலை வழங்கப்படுவதை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 விழுக்காடு தமிழர்களைக் கொண்டும், தமிழகத்தில் உள்ள மாநில அரசு பணியிடங்களை 100 விழுக்காடு தமிழர்களைக் கொண்டும் நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பின் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com