நீட் விவகாரத்தில் துரோகம்... தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் துரோகம்... தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் துரோகம்... தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின்
Published on

நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தி‌லும் உரிய நேரத்தில் முறையிடாமல் அமைதி காத்து அதிமுக அரசு எண்ணற்ற மாணவர்களின் மருத்துவ கனவை பறித்து விட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முகாமிட்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது அம்பலமாகிவிட்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 
காவிரி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ள அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும்‌ மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com