நாளை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

நாளை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்
நாளை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் மணி வரை கோவிட் 10 தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டும் வாக்களிக்கலாம் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வாக்காளர்கள் 5 மணிக்கு முன்னதாக வந்து வாக்களிக்க வேண்டும், வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் உரிய டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இவர்கள் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com