‘ 7 நாட்களுக்குள் விளக்கம்’ - மூன்று எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

‘ 7 நாட்களுக்குள் விளக்கம்’ - மூன்று எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

‘ 7 நாட்களுக்குள் விளக்கம்’ - மூன்று எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
Published on

எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் இருவரும் சமீபத்தில் சபாநாயகர் தனபாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, இந்தச் சந்திப்பில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் என கருதப்படும் பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 

அமமுகவில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மூவரும் பொறுப்பில் இருப்பதாக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரில், எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் 3 எம்.எல்.ஏக்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com