டிரெண்டிங்
தமிழக அரசு மூழ்கும் கப்பல் - ப.சிதம்பரம் விமர்சனம்
தமிழக அரசு மூழ்கும் கப்பல் - ப.சிதம்பரம் விமர்சனம்
தமிழக அரசை மூழ்கும் கப்பல் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது என குறிப்பிட்டிருக்கிறார். எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது, ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் மைனாரிட்டி அரசைக் காப்பாற்றவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள சிதம்பரம், சர்வதேச அளவில் தமிழகத்தின் பெயர் மோசமாகிக்கொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளார்.