டிரெண்டிங்
அதிமுகவிற்கு புது ரத்தமாக இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள் - முதல்வர் பழனிசாமி
அதிமுகவிற்கு புது ரத்தமாக இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள் - முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிற நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இளைஞர்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகம் மற்றும் இந்தியாவை எதிர்காலத்தில் ஆளக்கூடியவர்கள் இளைஞர்கள்தான். இளைஞர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று பேசினார்.
மேலும், இளைஞர்கள் நிறைந்த கட்சி அதிமுகதான். இந்த கழகத்திற்கு புது ரத்தமாக இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் எதிரிகள் பொய் தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஓட ஓட விரட்டவேண்டும் என்றும் இளைஞர்கள் மத்தியில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார்.