டிரெண்டிங்
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்த்தில், 7 பேரின் விடுதலை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.