\
கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்?

கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்?

கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்?
Published on

எம்.எல்.ஏ கருணாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானவர். ஆனாலும், அவர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

இதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு டிடிவி தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் 4 எம்.எல்.ஏக்களுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகத் தெரிகிறது. தகுதி இழப்பு சட்ட விதி 6 -ன் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com