சுப்பிரமணியன் சுவாமி உருவ பொம்மை எரிப்பு!

சுப்பிரமணியன் சுவாமி உருவ பொம்மை எரிப்பு!

சுப்பிரமணியன் சுவாமி உருவ பொம்மை எரிப்பு!
Published on

திருவாரூரில் சுப்பிரமணியசாமியின் உருவ பொம்மையை எரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக‌த்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. 

இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுப்பிரமணியசாமியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com