நெய்வேலியில் ஒத்துழையாமை போராட்டம் - வேல்முருகன் அழைப்பு

நெய்வேலியில் ஒத்துழையாமை போராட்டம் - வேல்முருகன் அழைப்பு

நெய்வேலியில் ஒத்துழையாமை போராட்டம் - வேல்முருகன் அழைப்பு
Published on

தமிழர் அமைப்புகள் சார்பில் நெய்வேலியில்‌ நடைபெற உள்ள ஒத்துழையாமை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுமக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளா‌ர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வரும் 10ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெறவுள்ளது. மக்கள் ஒன்று கூடினால், என்.எல்.சியில் மின் உற்பத்தியை நிறுத்த முடியும் என வேல்முருகன் கூறியுள்ளார். மத்திய அரசு நீதிமன்றத்தையே பணிய வைப்பதாக குற்றஞ்சாட்டும் வேல்முருகன் மக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் நேற்று அடித்து உடைக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்ட கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேல்முருகன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com