ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை இயக்குவது யார்?: இது டி.ஆர் கேள்வி

ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை இயக்குவது யார்?: இது டி.ஆர் கேள்வி
ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை இயக்குவது யார்?: இது டி.ஆர் கேள்வி

பிப்ரவரி 28ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்திரன், அதிமுக அரசின் மீது விமர்சனங்களை முன் வைத்தார். அவருக்கே உரித்தான பாணியில் பேசியவர், “படத்துல திரையில யார் வேணும்னாலும் ஆக்டிங் செய்யலாம், இவர்களை பின்னால் இருந்து இயக்குறது யார்? தமிழகத்தில் ஆட்சியாளர்‌கள் ‌செய்வது நடிப்பு, அவர்களை இயக்குவது யார்?” எனக் கேள்வியெழுப்பினார். கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் சொன்னதாலேயே அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியதாலேயே துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதாகும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டி.ராஜேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு உங்களை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு லட்சிய திமுக ஆதரவு அளிக்கவில்லை என்பதால், தமிழக அரசு ‌நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.மேலும் வரும் 28ஆம் தேதி முக்கிய முடிவு ஒன்றை அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com