டிரெண்டிங்
ஜிஎஸ்டிக்கு எதிராக ரஜினி பேசாதது ஏன்? டி.ராஜேந்தர் கேள்வி
ஜிஎஸ்டிக்கு எதிராக ரஜினி பேசாதது ஏன்? டி.ராஜேந்தர் கேள்வி
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரி அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது, மற்றவர்களுக்கு ஏன் சேவை வரி விதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். திரையரங்குகளுக்குள், பன்மடங்கு அதிக விலையுடன் உணவு பொருட்களை விற்பனை செய்வதாக கவலை தெரிவித்த அவர், டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பை உயர்த்த வேண்டும் என்ற திரைப்பட வர்த்தக சபையின் கருத்தில் தமக்கு உடன்பாடில்லை எனவும் தெரிவித்தார்.
திரைத்துறைக்கான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினிகாந்த் எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்று கேட்ட அவர், திரைத்துறையினருக்காகக் கூட குரல் கொடுக்காத ரஜினிகாந்த், மக்களுக்காக எப்படிக் குரல் கொடுப்பார் எனவும் கேட்டார்.

