மீண்டும் தொடங்கியது டி.ராஜேந்தரின் அரசியல் பயணம்

மீண்டும் தொடங்கியது டி.ராஜேந்தரின் அரசியல் பயணம்
மீண்டும் தொடங்கியது டி.ராஜேந்தரின் அரசியல் பயணம்

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

திரையுலகில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் இலட்சிய தி.மு.க என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, செயல்பட்டுவருகிறார். கடந்த 24ம் தேதி செய்தியாளர்களிடம் பேசியி டி.ராஜேந்தர், இன்று ஒரு முக்கிய முடிவை அறிவிக்க போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் ஏற்கெனவே ஆரம்பித்த 'இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். கட்சியின் பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் புகைப்படங்களுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்‌தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் டி.ராஜேந்தர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com