திமுகவில் ஒரு தொகுதி ஒதுக்கீடு - உதய சூரியன் சின்னத்தில் ஐஜேகே போட்டி

திமுகவில் ஒரு தொகுதி ஒதுக்கீடு - உதய சூரியன் சின்னத்தில் ஐஜேகே போட்டி
திமுகவில் ஒரு தொகுதி ஒதுக்கீடு - உதய சூரியன் சின்னத்தில் ஐஜேகே போட்டி

 திமுகவுக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் இடையே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

கடந்த சனிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக, ஐஜேகே இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளது. 

மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை விருப்பத் தேர்வாக கேட்டுள்ளதாக கூறிய ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், எந்தத் தொகுதி ஒதுக்கினாலும் போட்டியிடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக கூட்டணியில் ஐஜேகே இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com