கமல்ஹாசன் காலில் வீக்கம்: இன்றைய நிகழ்வுகள் ரத்து

கமல்ஹாசன் காலில் வீக்கம்: இன்றைய நிகழ்வுகள் ரத்து
கமல்ஹாசன் காலில் வீக்கம்: இன்றைய நிகழ்வுகள் ரத்து

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் கூறியதையடுத்து, பொதுக்கூட்டம் தவிர்த்து மற்ற இன்றைய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவருடன் பேசவும், புகைப்படம் எடுத்துகொள்ளவும் பொதுமக்கள் கூடியபோது, தவறுதலாக கமல்ஹாசனின் காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துவிட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று புறப்பட்டார். தொடர்ந்து, சிங்காநல்லூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், மாலை சிங்காநல்லூர் பொதுக்கூட்டம் தவிர, மற்ற நிகழ்வுகளை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com