'சந்தேகத்துக்குரிய வாக்காளர்' - அசாமில் வாக்களிக்க முடியாத நிலையில் 1 லட்சம் பேர்!

'சந்தேகத்துக்குரிய வாக்காளர்' - அசாமில் வாக்களிக்க முடியாத நிலையில் 1 லட்சம் பேர்!
'சந்தேகத்துக்குரிய வாக்காளர்' - அசாமில் வாக்களிக்க முடியாத நிலையில் 1 லட்சம் பேர்!

அசாம் தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியோர் பட்டியலில் இருப்பதால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் - இந்தியாவில் பலர் இச்சொற்றொடரை கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அசாம் மாநில மக்களுக்கு இது பழக்கமானதுதான்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து பலர் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறினர். இதனால் அசாம் மாநில வாக்காளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதையடுத்து 1997 ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அசாம் மாநிலத்தில் வீடுவீடாக ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது இந்திய குடிமகன் என்பதற்கான ஆவணத்தை வழங்காதவர்கள் அனைவரும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதாவது அவர்களது பெயருக்கு முன்னதா D Voter என்ற முத்திரை சேர்க்கப்பட்டது. சுமார் 3 லட்சம் பேர் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தீர்ப்பாயத்தை அணுகவும் உத்தரவிடப்பட்டது.

2019-ல் வெளியிடப்பட்ட வாக்களர் பட்டியலின்படி, சுமார் 1.20 லட்சம் பேர் சந்தேகத்துக்குரிய வாக்காளர் என்ற பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸும், தற்போது ஆட்சி நடத்தும் பாஜகவும் இப்பிரச்னையை தீர்க்கவில்லை என அனைத்து அசாம் பெங்காலி இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இச்சூழ்நிலையில் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 24 இஸ்லாமிய பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடிமக்கள் பதிவேடு , குடியுரிமை திருத்த மசோதா ஆகியவை அசாம் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருக்கும் நிலையில், சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியலும் புயலை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com