\
ஸ்டாலின் கடிதத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்!

ஸ்டாலின் கடிதத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்!

ஸ்டாலின் கடிதத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்!
Published on: 

மலையகத் தமிழர்களின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமான் பெயர் மீண்டும் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளித்துள்ளார். 

இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய சௌமியமூர்த்தி தொண்டைமானின் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு கடிதம் ஒன்றை எழுதிருந்தார்.  

இந்நிலையில் இந்த பிரச்னையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செ‌ல்வோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார். இதுக் குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மு.க ஸ்டாலினின் பெயரை குறிப்பிட்டு இந்த பிரச்னை குறித்து விரைவில் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று உறுதி அளித்துள்ளார்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com