\
''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்

''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்

''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்
Published on

ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் தொடங்க வாய்ப்பிருப்பதாக வெளியுறவுத்‌துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தட்சிண பாரத இந்தி பிரச்சார சபையின் 82வது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். இதில் பேசிய அவர் இந்தியாவின் தேசிய மொழியாக இந்திக்கு எல்லா தகுதிகளும் உள்ளதாக குறிப்பிட்டார். தென்னிந்திய மக்கள் இந்தி மொழி கற்க வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பியதாகவும் இதன் தொடர்ச்சியாக அவர் தம் மகன் தேவதாஸ் காந்தியை சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டார்

இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் வெளியுறவுத்‌துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் பிரதமர் தமிழகத்தில் தனது பரப்புரையை மதுரையில் இருந்து தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com