குற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்!

குற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்!
குற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்!

ஊழல் மற்றும் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் பதவி தொடர்பாக அரசியல் கட்சிகள் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஷ்வினி உபாத்யாய், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். அத்துடன் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு, தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கின் விசாரணையின் போது,  ஊழல் மற்றும் குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்தவர்கள், அரசியல் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க தடை கோரியதற்கு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
 அத்துடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அதற்குள் அரசியல் கட்சிகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com