1996-ல் அல்ல; 2017-ல் தான்.. ரஜினி சொன்ன விளக்கம்..!

1996-ல் அல்ல; 2017-ல் தான்.. ரஜினி சொன்ன விளக்கம்..!
1996-ல் அல்ல; 2017-ல் தான்.. ரஜினி சொன்ன விளக்கம்..!

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய அவர்,“ 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருக்கிறார் என பலரும் கூறுகின்றனர். ஆனால் நான் முதல்முறையாக அரசியலுக்கு வருகிறேன் என கூறியது 2017 டிசம்பரில்தான். ஆகவே இனிமேலாவது 1996-லிருந்தே அரசியலுக்கு வருதாக ரஜினி கூறிக்கொண்டிருக்கிறார் என பலரும் சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்.

என்னை வாழ வைத்த தெய்வங்களுக்காக அரசியலுக்கு வர 2017-ல் முடிவெடுத்தேன். கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர்.
அது கெட்டது; மக்களுக்கு ரொம்ப கெட்டது.

1996-ல் எதிர்பாராதவிதமாக எனது பெயர் அரசியலில் அடிபட்டது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com