ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி! கேன் வில்லியம்சன் போராட்டம் வீண்!

ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி! கேன் வில்லியம்சன் போராட்டம் வீண்!
ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி! கேன் வில்லியம்சன் போராட்டம் வீண்!

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 20வது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது டெல்லி அணி. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது ஹைதராபாத் அணி. அந்த அணிக்காக கேப்டன் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். 

வார்னர் 8 பந்துகளில் 6 ரன்களை குவித்து ரபாடாவின் அற்புத த்ரோவில் ரன் அவுட்டானார். அவர் வெளியேறியதால் கேன் வில்லியம்சன் கிரீசுக்கு வந்தார். பேர்ஸ்டோ 18 பந்துகளில் 38 ரன்களை குவித்து ஆவேஷ் கான் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 

தொடர்ந்து களத்திற்கு வந்த விராட் சிங் 14 பந்துகளில் 4 ரன்களை குவித்து ஆவேஷ் கான் வேகத்தில் ஃபுல் ஷாட் ஆட முயன்று விக்கெட்டை இழந்தார். இருப்பினும் வில்லியம்சன் அற்புதமான கிரிக்கெட் ஷாட்களை விளையாடி அசத்தினார். மறுபக்கம் கேதர் ஜாதவ் 9 பந்துகளில் 9 ரன்களை குவித்து மிஸ்ரா சுழலை மிஸ் செய்ததால் பண்ட் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். 

அதையடுத்து அபிஷேக் ஷர்மா களத்திற்கு வந்தார்.  

42 பந்துகளில் 51 ரன்களை சேர்த்து நடப்பு சீசனில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார் வில்லியம்சன். கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட அபிஷேக் ஷர்மா அக்சர் சுழலில் LBW முறையில் அவுட்டானார். தொடர்ந்து வந்த ரஷீத் கானும் அக்சரின் அடுத்த பந்திலேயே LBW அவுட்டானார். அதனால் விஜய் ஷங்கர் களத்திற்கு வந்தார். 

கடைசி மூன்று ஓவர்களில் ஹைதராபாத் அணி 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. விஜய் ஷங்கர் ஆவேஷ் கான் வீசிய 19வது ஓவரில் வெளியேறினார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா கடைசி ஓவரை வீசினார். வில்லியம்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். WIDE, பவுண்டரி, சிங்கிள் என முதல் இரண்டு பந்துகளில் 6 ரன்கள். அடுத்து இரண்டு பந்தை எதிர்கொண்ட சுஜித் ஒரு சிக்சர் மற்றும் ஒரு சிங்கிள் எடுத்தார். அடுத்த பந்தில் வில்லியம்சன் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார் சுஜித். அதனால் இரு அணியின் ரன்களும் சமனில் இருந்ததால் முடிவை அறிய சூப்பர் ஓவர் விளையாட வேண்டி இருந்தது. இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர் இது. 

கைதாரபாத் அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்தது. வில்லியம்சன் மற்றும் வார்னர் களம் இறங்கினர். அந்த ஓவரை அக்சர் பட்டேல் வீசி இருந்தார். வார்னர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்து டாட். அடுத்த பந்தில் ஒரு சிங்கிள். மூன்றவது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி விளாசினார். நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் சிங்கிள். ஆறாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் வார்னர். அதில் ஒரு ரன் ஷாட் என்பதால் மொத்தமாக ஆறு பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத். 

டெல்லி அணி 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது. பண்ட் மற்றும் தவான் களம் இறங்கினர். பண்ட் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் தவான் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பவுண்டரி அடித்தார். நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் சிங்கிள். கடைசி பந்தில் சிங்கிள் தேவைப்பட்டது. தவான் சிங்கிள் எடுத்ததால் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com