டிரெண்டிங்
சர்க்கரை மானியத்தை உயர்த்த கோரிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சர்க்கரை மானியத்தை உயர்த்த கோரிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தக் கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சர்க்கரை மானியம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு கிலோ சர்க்கரை சந்தையில் 42 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் இதனால் மானியத்தை 18.50 ரூபாயில் இருந்து 28.50 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டு்ம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் ஒரு குடும்பத்திற்கு இரண்டு கிலோ சர்க்கரை வீதம் வழங்குவதை உறுதி செய்ய மாநிலத்திற்கு உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு ஒரு மாதத்திற்கு 35,500 மெட்ரிக் டன் சர்க்கரை தேவை என்றும், இது தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.