நெல்லை பணகுடி: சம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்... குலுக்கலில் வென்றது யார் தெரியுமா?

நெல்லை பணகுடி: சம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்... குலுக்கலில் வென்றது யார் தெரியுமா?
நெல்லை பணகுடி: சம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்... குலுக்கலில் வென்றது யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில் அதிமுக வேட்பாளர் உஷா, பாஜக வேட்பாளர் மனுவேல் ஆகிய இரு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால், வெற்றி வேட்பாளரை அறிவிக்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களும் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் இருவருக்கும் குலுக்கல் முறையில் வெற்றி கணிக்கப்பட்டது. அதன்முடிவில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணகுடியில், 68.03% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com