வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா

வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா
வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா

ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. பெரும்பாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்தது. 

இறுதியாக நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகியது. அதில் மிசோசரமில் மாநில கட்சியான எம்.என்.எஃப் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலங்கானாவில் ஆளும் மாநில கட்சியான சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில், நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. மத்திய பிரதேச ஆளுநர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

இந்நிலையில் ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார். வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை என ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com