\
வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
Published on

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன்‌ சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பாமர மக்களா? அல்லது தீவிரவாதிகளா? என்ற விவரம் தெரியவேண்டும் எனக் கூறினார். கூடங்குளம் உள்பட தமிழகத்தில் பல போராட்டங்களின் பின்னணியில் தீவிரவாதிகள் இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதவர் ரஜினி என குற்றஞ்சாட்டினார். இன்று ஒரு கருத்து நாளை ஒரு கருத்து என தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்பவர் நடிகர் ரஜினி என்றும் சுப்பிரமணியன்‌சுவாமி விமர்சனம் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com