ஊரடங்கில் முடங்காமல் முயற்சி செய்து ஆடை வடிவமைப்பில் அசத்தும் பெண் பட்டதாரி...

ஊரடங்கில் முடங்காமல் முயற்சி செய்து ஆடை வடிவமைப்பில் அசத்தும் பெண் பட்டதாரி...

ஊரடங்கில் முடங்காமல் முயற்சி செய்து ஆடை வடிவமைப்பில் அசத்தும் பெண் பட்டதாரி...
Published on

ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மூலம் ஆடை வடிவமைப்பு துறையில் அசத்தி வருகிறார் பட்டதாரி விஜயலெட்சமி.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து தரப்பு மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். அதுமட்டுமல்லாமல் பெரிய தொழில்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், நம்நாடும், தனிநபர் ஒவ்வொருவரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நிலையில், மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி எம்.பி.ஏ பட்டம் பெற்றிருந்தாலும், மனதிற்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அழகுகலை தொடர்பான ஆடை வடிவமைப்பு பயிற்சி பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜி பேஷன்ஸ் என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் விஜயலெட்சுமிக்கு தொழில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் மனம்தளராத விஜயலட்சுமி வீட்டிலிருந்தபடியே, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் தனது ஆடை வடிவமைப்புகளை விளம்பரப்படுத்தினார். இதன்மூலம், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் நன்மதிப்பை பெற்றுள்ள இவர், அவர்களின் திருமணம் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு புதிய மாடல்களில் ஆடைகளை வடிவமைத்து வழங்க தொடங்கினர்.


இதன்மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களில் 300க்கும் அதிகமான ஆடைகளை வடிவமைத்து வழங்கியுள்ளார். மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கு இந்த ஊரடங்கு பெருமளவு வீழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மத்திய மாநில அரசுகள் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்றும். அதேபோல தற்போது கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க வேண்டும் என்று விஜயலெட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com