டிரெண்டிங்
ஓபிஎஸ் வீட்டின் முன்பு மிக்சர் திண்ணும் போராட்டம்
ஓபிஎஸ் வீட்டின் முன்பு மிக்சர் திண்ணும் போராட்டம்
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்பு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் நூதான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக மவுன போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மிக்சர் திண்ணும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் காமேஷ், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் கட்சி சார்பாக பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.