\
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய மேடை முன்பு கல் வீச்சு

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய மேடை முன்பு கல் வீச்சு

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய மேடை முன்பு கல் வீச்சு
Published on

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசும் போது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது அடையாளம் தெரியாத நபர்கள் பொதுகூட்டம் மேடையின் முன்பு கற்களை வீசினர். இதனால் சிறிது நேரத்திலேயே பேச்சை முடித்துக்கொண்டு
உடனடியாக அமைச்சர் அங்கிருந்து வெளியேறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com