ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் என் உயிருக்கு ஆபத்து: வைகோ

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் என் உயிருக்கு ஆபத்து: வைகோ

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் என் உயிருக்கு ஆபத்து: வைகோ
Published on

உடன்குடியில் பிரச்சாரம் செய்தபோது தன் மீது வீசப்பட்ட கற்கல் திட்டமிட்டு வீசப்பட்டதாகவும் அப்படி வீசியவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆதரவாளர்கள் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை என்றும் நாங்கள் மோடி போல் பயந்து ஓடமாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஸ்டெர்லைட்க்கு எதிராக உடன்குடியில் பிரச்சாரம் செய்தபோது தன் வீது வீசப்பட்ட கற்கல் திட்டமிட்டு வீசப்பட்டதாகவும் அப்படி வீசியவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தார். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் நல்ல பெயர் பெற்ற காமராசர் பல்கலைக்கழகம் தற்போது இந்த நிலையில் உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது என்று கூறிய அவர், நிர்மலா தேவி போன்றவர்களால் பேராசிரியர் சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறினார். ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வைகோ, தமிழகம் இதற்கு முன் இவ்வளவு மோசமான ஆளுநரை பார்த்தது இல்லை என்று சாடினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com