மாநில சுயாட்சி மாநாடு: தேசிய தலைவர்களை அழைக்க வைகோ திட்டம்

மாநில சுயாட்சி மாநாடு: தேசிய தலைவர்களை அழைக்க வைகோ திட்டம்

மாநில சுயாட்சி மாநாடு: தேசிய தலைவர்களை அழைக்க வைகோ திட்டம்
Published on

மதிமுக சார்பில் நவம்பர் 20ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்பு வைகோ இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டிற்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய தலைமைகள், மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களையும் அழைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோவை தாக்க முற்பட்ட சிங்களர்களுக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com