டிரெண்டிங்
ஸ்டாலினை தடுத்து நிறுத்தியது ஏன்?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
ஸ்டாலினை தடுத்து நிறுத்தியது ஏன்?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கட்சராயன் ஏரியைப் பார்வையிடச் சென்ற மு.க.ஸ்டாலினை முன்கூட்டியே தடுத்து நிறுத்தியது ஏன் என்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏரிகளை தூர்வாருவதை அரசு தடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று அதன் மீது நடைபெற்ற விசாரணையில் அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் ஸ்டாலின் தடுக்கப்பட்டதாக அரசு தரப்பு கூறிய நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் அரசு தலையிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வருவாய்த்துறை இதில் தலையிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.