குட்காவைக் காண்பித்தார் ஸ்டாலின்: திமுக எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் புகார்

குட்காவைக் காண்பித்தார் ஸ்டாலின்: திமுக எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் புகார்
குட்காவைக் காண்பித்தார் ஸ்டாலின்: திமுக எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் புகார்

தமிழக சட்டப்பேரவைக்குள் குட்காவை கொண்டுவந்து காண்பித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது அவை உரிமை மீறல் புகார் எழுப்பப்பட்டுள்ளது. 

சென்னையில் குட்கா எனப்படும் போதைப்பொருள் தங்கு தடையின்றி விற்கப்படுவதாக கூறி அவற்றை பேரவையில், ஸ்டாலின் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்ஏக்கள் காண்பித்தனர். இந்த பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். 

இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டு வந்ததற்காக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது அவை உரிமை மீறல் புகார் எழுப்பப்பட்டது. அப்போது, தடை செய்யப்பட்ட பொருள் எவ்வாறு கிடைத்தது என திமுகவினரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் விற்பனை பற்றி காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியதுதானே என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதேநேரத்தில் குட்கா விற்பனை பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் காவல்துறையே குட்கா விற்பனைக்கு துணை போகிறது என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com