கதிராமங்கலத்தில் இருந்து போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

கதிராமங்கலத்தில் இருந்து போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

கதிராமங்கலத்தில் இருந்து போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on


தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள காவல் துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். போராடும் மக்களை சந்திக்கத் தவறியதுடன், மோசமான நிகழ்வுக்கு வித்திட்ட மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தீ வைப்பில் ஈடுபட்ட உண்மையான காவல் அதிகாரிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற கலாச்சாரம் தொடராமல் வேரறுக்கவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கதிராமங்கலம் கிராமத்தில் சுமூக நிலை நிலவுகிறது என்று முதலமைச்சர் கூறுவது காவலர்களின் செயல்களை மறைக்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ளார். அபாண்டமான குற்றச்சாட்டுகளை அப்பாவி விவசாயிகள் மீது முதலமைச்சர் சுமத்தியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கண்டனத்தை தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com