ஸ்டாலின் போராட்டம் எல்லாம் செய்தி கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டாலின் போராட்டம் எல்லாம் செய்தி கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ
ஸ்டாலின் போராட்டம் எல்லாம் செய்தி கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

மு.க.ஸ்டாலின் போராடுவது செய்தி கிடையாது, அவர் இந்த அரசை கண்டித்து போராடாமல் இருந்தால்தான் செய்தி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் நடைப்பெற்ற தமிழக அரசின் நலத்திட்டம் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்றார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாநகராட்சி ஆணையாளர் அணிஸ்சேகர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, டீசல், உதிரி பாகங்கள் விலை ஏறியுள்ளது. இது போன்ற காரணங்களால் தான் கட்டணம் உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் திட்டமென விருது பெற்ற போக்குவரத்துத்துறையை நஷ்டத்திலிருந்து மீட்கவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்றார். 

மேலும் பேசியவர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராடுவது செய்தி கிடையாது. அவர் இந்த அரசை கண்டித்து போராடாமல் இருந்தால், அது தான் செய்தி. இந்த அரசை ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் எதாவது குற்றச்சாட்டு சொல்லி கொண்டு தான் இருக்கிறார் என்று கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com