திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் ஸ்டாலின்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை மும்பையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் வி.தேவதாசன் என்பவரால் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பழமையான தமிழர் அமைப்புகளில் ஒன்று இது ஆகும். மன்றத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்று நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பாந்தூப் பகுதியில் 5 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருவள்ளுவர் மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட சிலை ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. சிலை திறப்புக்காக மும்பை வந்த ஸ்டாலினுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மும்பையில் உள்ள திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.