டிரெண்டிங்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் ராகுல்: ஸ்டாலின் வாழ்த்து
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் ராகுல்: ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல், மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவார் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் பெருமைகளை ராகுல் காந்தி மீட்டெடுப்பார் என நம்புவதாக ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தரும், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.